Thursday, April 22, 2010

பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கைக்கு பதில் - 'பெரியார் கொள்கைக்கு எதிரான சீமானும் நாம் தமிழர் இயக்கமும்'

தமிழரான கொளத்தூர் மணி மீது எம் தமிழ் இனத்துக்கு பெரு மதிப்பு உள்ளது. ஆனால் அவர் நடத்தி வருகின்ற பெரியார் தி.க.வில் பெரும்பான்மையானவர்கள் திராவிடர் என்று சொல்லக்கூடிய தெலுங்கர்கள்தான். மணியின் அடுத்த நிலையில் கட்சியை நடத்தி கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான். சென்னையை ஆக்கிரமித்துள்ளவர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கோவை பகுதிகளான கொங்கு பகுதியிலும் கோவை இராமகிருஷ்ணனும் தெலுங்குதான். மொத்த பெரியார் தி.க.வும் இவர்களின் இரண்டு பேரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அடிமட்ட பதவி முதல் கட்சியின் உயர் பதவியில் இருப்பவர்களும் பெரும்பாலும் தெலுங்குகாரர்கள் தான். இப்படிபட்ட சூழலில்தான் கொளத்தூர் மணி கட்சி நடத்த வேண்டியுள்ளது. வீரப்பன் விவகாரத்தில், வீரமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன், மணியிடம் அப்போது பணப்புழக்கம் காணப்பட்டது. ஆதனாலேயே, இந்த இருவரும் - விடுதலை இராசேந்திரன் மற்றும் கோவை இராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் பகைத்துக் கொண்டு பெரியார் தி.க.வை தலைமை வகித்து நடத்த முடியாத சூழலில் கொளத்தூர் மணியும் உள்ளார். இதனாலேயே திராவிடர் பற்றி சாதகமாய் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார். பலகாலமாய் இப்படி அடிமைத் தலைவனாய் இருப்பதை விட, தனியே வந்தால் கொளத்தூர் மணியை தமிழர்கள் எல்லோரும் ஆதரிக்க தயாராய் இருக்கிறோம். சிறுபிள்ளைத்தனமாய் வடமொழி பெயர் வைக்கப்பட்டது போன்றவைகளை பேசி உங்களது பெருமையையும் நன்மதிப்பையும் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
________________________________________
கொளத்தூர் மணியின் அறிக்கை :

பெரியார் கொள்கைக்கு எதிரான சீமானும் நாம் தமிழர் இயக்கமும் - கொளத்தூர் மணி அறிக்கை - தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா?

http://thozharperiyar.blogspot.com/2010/04/blog-post_23.html

No comments:

Post a Comment